நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை சார்பாக, 19வது ஆண்டு ரோஜாக்கூட்டம் விழா 2029 எனும் தலைப்பில், ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது

கோவை இராம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க மண்டப அரங்கில்,
நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பு, தனது 19வது ரோஜாக்கூட்டம் தினம் விழா 2026, எனும் தலைப்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை நடத்தியது. இந்த விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், தன்னார்வலர்கள், கல்வி கொடையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் இந்த ரோஜாக்கூட்டம் எனும் திட்டம், நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் முதன்மை திட்டமாக விளங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விப் உபகரணங்கள் உதவித்தொகை மற்றும் உயர்கல்விக்கான ஆதரவும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சுமார், 1000 த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நேரடியாக பயனடைந்தனர். மேலும் தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் முதலிடம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியினை,
நேட்டிவ் மெடிக்கேர் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஏ.எஸ் சங்கரநாராயணன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவின் தலைமை விருந்தினராக கோவை மாவட்ட பயிற்சி துணை ஆட்சியர் திருமதி. ஹரிப்பிரியா கலந்துகொண்டு, நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் தொடர் சேவையை பாராட்டி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து ஸ்டேட் ஸ்ட்ரீட் அமைப்பின் துணைத் தலைவர், சுதர்சன், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறப்புரையாற்றி, மாணவ மாணவியர்களின் கல்வி இடைவெளியை குறைக்கும் இந்த திட்டத்தின் முயற்சிகளை பாராட்டினார்.
இந்த விழாவில் பல நிறுவனங்களின் கார்ப்பரேட் தலைவர்கள், தன்னார்வலர்கள், லையன்ஸ் இன்டர்நேஷனல், ரோட்டரி இன்டர்நேஷனல், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், என பலரும் கலந்து கொண்டனர். இறுதியாக நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி
பிரபுசங்கர், நன்றியுரை நிகழ்த்தி நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.