பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஆலை முன்பு உண்ணாவிரத போராட்டம் – பீணியாறு விவசாயிகள் மேம்பாட்டு நல சங்கம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வரலட்சுமி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் பாதிக்கப்படும் விவசாயிகள் வரலட்சுமி ஆலையின் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வரலட்சுமி கிழங்கு மற்றும் மக்காச்சோள அரவை ஆலை கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பீணிஆற்றங்கரையில் சட்டவிரோதமாக ஆற்றங்கரையை ஆக்கிரமிப்பு செய்து 5 ஏக்கரில் நூறு அடி ஆழம் கொண்ட பெரிய ஆல் கிணறு வெட்டி கனிம பொருட்கள் எடுத்து வெளிச்சந்தையில் விற்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆள் கிணற்றிலிருந்து பெருமளவில் நிலத்தடி நீர் எடுத்து ஆலைக்கு பயன்படுத்துவது மற்றும் ஆற்றங்கரை உடைத்தும் ஆற்றில் தலையிட்டு தண்ணீர் திருடுவது ஆற்றில் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுகளை வெளியேற்றி விவசாய நிலத்தையும் நீர் நிலைகளை மாசுபடுத்துவதாக ஆளை நிர்வாகம் இது பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

மேலும் நிலத்தடி நீர் குடிநீர் விவசாயம் கால்நடைகள் பொது சுகாதாரம் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் பலவித தொற்று நோய்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் விவசாயிகள் பலமுறை அரசுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.

எனவே வரலட்சுமி ஆலையின் முன்பு பீனி ஆறு விவசாயிகள் மேம்பாட்டு நல சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.