
இரசாயன உரங்களின்றி இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஒரு நிரந்தர சந்தையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன்“மாமதுரை – இயற்கை மதுரை” என்ற கருப்பொருள் அடிப்படையில் இயற்கை பஜார் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கியது
இதனை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

மேலும், வேளாண்மை துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயிர்ம வேளாண்மை கையேட்டினை வெளியிட்ட அமைச்சர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கூப்பன் களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
நிகழச்சியில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி,
இன்றைக்கு இயற்கை விவசாயம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்றும்,
அனைவரும் இயற்கை விவசாயம் செய்தாலும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைபடுத்துதல் மிகவும் சிரமமாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும், உற்பத்தியாளரையும், நுகர்வோரையும் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையை உருவாக்கிட வேண்டும் என்ற அவர்,
நாட்டு மக்கள் பழமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பாக கடைபிடிக்கப்பட்ட உணவுப் பழக்கங்களை மக்கள் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்
என்றும் அவர் கூறினார்.
.
இரசாயன உரங்களின்றி இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஒரு நிரந்தர சந்தையை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் முன்மாதிரியாகவே இந்த இயற்கை பஜார் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் குமார்,
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாவட்ட வன அலுவலர் ரேவ்தி ரமன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் திட்ட இயக்குனர் தமிழரசி
உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் என்ன ஏராளமான கலந்து கொண்டனர்
