வீட்டுமனை பட்டா விவசாய நிலங்களுக்கு பட்டா வேண்டி ஏமனூர் கிராம மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் விதமாக திருவோடு ஏந்தி வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகமரை ஊராட்சி ஏமனூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மேட்டூர் அணை கட்டுமான பணியின் போது அங்கிருந்த மக்களை இப்பகுதிக்கு அரசு நிலம் வழங்கி குடியேற்றியது இந்த நிலையில் 91 ஆண்டுகளாக எமனூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா வேண்டி ஏராளமான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் செய்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்திய பின்பு 1997 ஆம் ஆண்டு சுமார் 450 வீடுகளுக்கு பட்ட வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஏமனூர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடி தண்ணீர்,மின்சாரம்,ஆரம்ப சுகதரநிலைய மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதி அனைத்தையும் இப் பகுதி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்கிய அடிப்படையில் அடிப்படை வசதிகள் அரசு வழங்கியது. இதனை அடுத்து சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்த பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு நெருப்பூர் – ஏமனூர் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு திட்டங்கள் எதுவும் இந்த கிராம மக்களுக்கு வருவதில்லை இது குறித்து அரசு அதிகாரிகளிடம் இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டபொழுது அரசு வழங்கிய பட்டா போலியானது என்றும் இப்பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா இல்லை அதனால் அரசு திட்டங்கள் எதுவும் இப்பகுதிக்கு வழங்க இயலவில்லை என்றும் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருகளுக்கு சிமெண்ட் சாலை அமைத்தல் இலவச வீட்டு மனை உள்ளிட்ட திட்டங்கள் இப்பகுதியில் பட்டா இல்லாததால் செயல்படுத்த இயலவில்லை என்றும் தெரிவிக்கின்றன எனவே இதனை கண்டித்தும் சுமார் 100 ஆண்டு காலமாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரியும் இப்பகுதி மக்கள் 2026 தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஏமனூர் கிராமத்தில் இருந்து திருவோடு ஏந்தி ஊர்வலமாக மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்தும் அரசு அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வனப்பகுதியில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.