
மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் மனு………
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களிடம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை வழங்கினார்.
அதில் வெங்காடு ஊராட்சிக்கு அடங்கிய இரும்பேடு கிராமத்தில், ஹூண்டாய் மொபிஸ் கம்பெனி கட்டுமான பணி நடைபெறுகின்றது. அதில் வேஸ்ட் மண் நூறுலோடு உள்ளது என்றும், அதில் 40 லோடு மண்ணை கொட்டிக்கொள்ள அனுமதி கோரி மனு வழங்கினார்.
மற்றொரு மனுவில் அதே ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் வேஸ்ட் பண்ணை மோசமாக உள்ள வெங்காடு ஊராட்சி தெருக்களுக்கு பயன்படுத்த கேட்டபோது, பிள்ளைப்பாக்கம் சிப்காட் ப்ராஜெக்ட் மேனேஜர் தராமல் சில நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகவும், அதனை தடுத்து தங்கள் ஊராட்சிக்கு வழங்கவும் கோரிக்கை மனு வழங்கினார்.
மற்றொரு மனுவில் வெங்காடு ஊராட்சி சிப்காட்டில் அமைந்துள்ள எச்.எல்.மேண்டோ தொழில் நிறுவனம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர ஊராட்சிக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு இடத்தை ஆக்கிரப்பு செய்துள்ளார் என்றும்,மேலும் ஊராட்சி சுற்றி தொழில் நிறுவனம் அமைந்துள்ளதால் ஆடு மாடு மேய இடமில்லாமல் அவதிபடுகின்றது என்றும் எனவே மாவட்ட ஆட்சியர் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு வழங்கினார்.
மற்றொரு மனுவில் வெங்காடு ஊராட்சியில் அமைந்துள்ள ஊரணக் குட்டை 50 ஆண்டு காலமாக பராமரிப்பு பணிகள் செய்யப்படவில்லை என்றும்,இதனை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் மனு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட திட்ட இயக்குனர் க.ஆர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
