100க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்குசிறந்த தொழில் முனைவோர்கான வெற்றி நாயகி விருது

கோவையில் நவம்பர் 8ந் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்வான மிகப்பெரிய தாய்மை வடிவில் மனித அமைப்பை உருவாக்கும் உலக சாதனை நிகழ்விற்கான போஸ்டர் வெளியீடு துடியலூர் அருகே உள்ள லட்சுமி நாராயண திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு சிறந்த தொழில் முனைவோர்கான வெற்றி நாயகி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை துடியலூர் அருகே உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் வெற்றி நாயகிகள் பெண்களின் திறமைக்கான பயணம் 2025 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது

நுற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கோவையில் நவம்பர் 8ந் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்வான மிகப்பெரிய தாய்மை வடிவில் மனித அமைப்பை உருவாக்கும் உலக சாதனை நிகழ்விற்கான போஸ்டர் வெளியீடு மற்றும் சிறந்த தொழில் முனைவோர்கான வெற்றி நாயகி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்சியில் சினிமா நடிகையும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான சசிலயா, சினிமா நடிகை கவிதா ரமேஷ், பெமினை நிருவனர் டாக்டர் கோமதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து தன்னம்பிக்கை உரையாற்றினார்.

தொடர்ந்து கோவையில் நவம்பர் 8ந் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்வான மிகப்பெரிய தாய்மை வடிவில் மனித அமைப்பை உருவாக்கும் உலக சாதனை நிகழ்விற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் தங்கள் கைகளில் போஸ்டர்களை ஏந்தி காண்பித்தனர்.

அதைத் தொடர்ந்து ஐ பவுண்டேசன் மற்றும் ஆர்த்தி ஜிவல்லரி நடத்திய இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு வெற்றி நாயகிகள் என்ற தலைப்பில் கிச்சன் கில்லாடிகள், மெகந்தி, ரங்கோலி, டான்ஸ் மற்றும் பேசன் டிசைனர் ஷோ உள்ளிட்ட பெண்களின் திறமைக்கான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் 100க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு சிறந்த தொழில் முனைவோர்கான வெற்றி நாயகி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் போட்டிகளில் பங்கேற்ற பெண்களுக்கு சேரா ஹோம் ஜங்சன் நிறுவனம், எஸ் எஸ் பொன்னுசாமி கவுண்டர் அரிசி நிறுவனம் இணைந்து பரிசுகள் வழங்கினர். இவ்விழாவில் ஏராளமான பெண்களும் மற்றும் குழந்தைகளும் பங்கேற்றனர். இந்த விழாவினை ராசிகா ஈவன்ஸ் ஒருங்கிணைந்து நடத்தியிருந்தனர்.