
உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை அதிவேக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு பகுதி மக்களும், பல இடங்களுக்கு சென்று, அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டும் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில், அந்நிறுவனங்களின் சந்திப்பு, ஜூபிடர் டிராவல் எக்சிபிஷன் நிறுவனம் சார்பில் கோவை தமிழ்நாடு உணவகத்தில் இந்திய பயண சந்தை கண்காட்சி எனும் தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது, மைசூர், மங்களூர், மதுரை, திருச்சி, மற்றும் வேலூர், ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது கோவையில் நடைபெற்றது. இந்த கண்காட்சிக்கு சுற்றுலா பயண முகவர்கள், இத்துறை சார்ந்த நிபுணர்கள், மற்றும் தொழில் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, அந்தமான், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மற்றும் கோவா, போன்ற மாநிலங்களைச் சேர்ந்த கண்காட்சியாளர்களுடன் பயண முகவர்கள் தங்களது அரங்குகளை அமைத்திருந்தனர். இக்கண்காட்சியின் மூலமாக, வியட்நாம், தாய்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், பூட்டான், பாலி, மலேசியா, துபாய், போன்ற சர்வதேச நாடுகளைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலை நாடுகளில், புதிய தொழில் வாய்ப்புகளை ஆராயவும், சுற்றுலா துறையின் நவீன போக்குகளை அறிந்து கொள்ளவும், இக்கண்காட்சி பேரு உதவியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆப்பரேட்டர்கள் சங்க தமிழக பிரிவின் தலைவர் அசோக் குமார், தேசிய மற்றும் மாநில விருது பெற்ற ராதாகிருஷ்ணன், மாநில விருது பெற்றுள்ள பஞ்சவர்ணம், ராதாகிருஷ்ணன், மற்றும் இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆப்பரேட்டர்கள் சங்க தமிழ்நாடு பிரிவின் செயலாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
