கோவையில் தைப்பூசத்தை முன்னிட்டு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை சார்பாக தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு கோவை கணுவாய் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது…

ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவை நண்பர்கள் இணைந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர்..

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தைப்பூச விழாவை ஒட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது…

முருகப்பெருமானின் அருளாலும் பெரியோர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதத்தாலும் கிருத்திகை நாதம் கூட்டு வழிபாட்டு பேரவையின் எட்டாம் ஆண்டு தைப்பூசம் அன்னதான விழா பெரிய தடாகம் பகுதியில் அமைந்துள்ள அனுவாவி சுப்பிரமணிய ஆலயத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புடன் நடைபெற்றது..