
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் உள்ள தேவதாஸ் மருத்துவமனை தென் தமிழகத்தில் முதல் ரோபோடிக் எலும்பியல் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து தற்போது இரண்டாவது ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதியதாக அறிமுகப் படுத்தப்பட்ட இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை அமைப்பு, பொது அறுவை சிகிச்சை, இதய மருத்துவம், யூராலஜி, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல சிக்கலான மருத்துவத்துறைகளில் மருதுவரின் உதவியுடன் அறுவை சிகிச்சைகளை மேற் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அறுவை சிகிச்சையில் மிக துள்ளியமான முறையில் குறைந்த பட்ச ரத்த இழப்போடு குறுகிய நேரத்தில் அதிகமான நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ள உதவுகிறது.
இந்த புதிய தொழில் நுட்பம் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவமனையின் தலைவர் தேவதாஸ் கூறுகையில்
“தேவதாஸ் மருத்துவமனையில் புதுமை என்பது எப்போதும் எங்கள் நோக்கத்தின்மையமாக உள்ளது. எலும்பியல் துறையில் ரோபோடிக் அறுவைச்சிகிச்சையை அறிமுகப்படுத்தியது எங்கள் சேவையின் முக்கிய கட்டமாக இருந்தது. இன்று இரண்டாவது ரோபோடிக் அறுவைச்சிகிச்சை அமைப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள நோயாளிகளுக்கும் மேலும் துல்லியமான, பாதுகாப்பானசிகிச்சையை வழங்க முடிகிறது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை எங்கள் சமூகத்திற்கு விரைவாகவும் எளிதாகவும் வழங்குவதே எங்கள் நோக்கம் என்றார்
மேலும் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் சதிஷ் தேவதாஸ் கூறுகையில்
“எலும்பியல் அறுவைச்சிகிச்சைகளில் ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய அனுபவத்தில், இது அறுவைச்சிகிச்சையின் துல்லியத்தையும் திட்டமிடுதலையும் மேம்படுத்தி, நோயாளிகள் விரைவாக நலம் பெற்று, வீடு திரும்ப உதவுவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். குறிப்பாக மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை மற்ற மருத்துவத் துறைகளுக்கும் விரிவு படுத்துவது, மக்களுக்கு பொது அறுவை சிகிச்சை துறையிலும் விரைவில் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எடுத்து இருக்கும் அடுத்த கட்ட முயற்சியாகும் என்றார்
மருத்துவர் Dr.Hema Sathish கூறுகையில்:
“எப்போதும் நோயாளிகளின் நலனைக்கருத்தில் கொண்டு இயங்கி வரும் தேவதாஸ் மருத்துவமனையில் ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள், மக்களுக்கு வழங்கப்படும் ஒரு புதிய முயற்சியாகும். குறிப்பாக மகப்பேறு மற்றும் சிறுநீரியல் துறைகளில் குறைந்த காயத்துடன் மிகுந்த துல்லியத்துடன் அறுவைச்சிகிச்சை செய்ய இது உதவுகிறது. இதன் மூலம் நோயாளிகள் விரைவாக குணமடைந்து நல்ல வாழ்க்கைத் தரத்தை பெற முடிகிறது
