
சைனஸ் வீனோசஸ் ஏஎஸ்டி (sinus venosus ASD) என்பது இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே ஏற்படும் அசாதாரண துவாரத்தினால் ரத்தம் தவறான திசையில் பாயும் ஒரு அரிதான பிறவி குறைபாடாகும்.
• திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இல்லாமல், குறைந்தபட்ச ஊடுருவல் முறையான ‘டிரான்ஸ்கேத்தீட்டர் கவர்டு ஸ்டென்ட்’ (transcatheter covered stent procedure) செயல்முறை மூலம் இந்த குறைபாடு வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது.
மதுரை, ஏப்ரல் 01, 2026: தென் தமிழகத்தின் இதய சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு மிக முக்கிய சாதனை நிகழ்வாக, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 64 வயது விவசாயிக்கு இருந்த ஒரு அரிதான பிறவி இதயக் குறைபாட்டை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக சரிசெய்துள்ளது. ‘சைனஸ் வீனோசஸ் ஏஎஸ்டி’ என அழைக்கப்படும் இந்த அரிய இதய பிரச்சனைக்கு, திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையை முற்றிலும் தவிர்த்து, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட டிரான்ஸ்கேத்தீட்டர் முறையில் (transcatheter covered stent procedure) இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உடல் உழைப்பின்போது அதிகரித்துக் கொண்டே போகும் மூச்சுத்திணறல், எளிதில் சோர்வடைதல் மற்றும் இதயப் படபடப்பு போன்ற கடுமையான பிரச்சினைகள் இந்நோயாளிக்கு இருந்தன. இவை காலப்போக்கில் மேலும் அதிகரித்து அவரது அன்றாட இயல்பான பணிகளை பாதிக்கும் அளவுக்கு மிகவும் மோசமடைந்தன. டிரான்ஸ்தொராசிக் எக்கோகார்டியோகிராம், இதயத்தை மிகத் தெளிவாகக் காண உணவுக் குழாய் வழியே பிரத்யேகமாக செய்யப்படும் டிரான்ஸ்ஈசோபேஜியல் எக்கோகார்டியோகிராம் மற்றும் இதய செயல்பாட்டை துல்லியமாக அறிவதற்கான கார்டியாக் சிடி ஸ்கேன் (Transthoracic Echocardiogram (a non-invasive ultrasound performed over the chest), a Transesophageal Echocardiogram (which uses a probe passed through the food pipe for clearer visualisation of the heart), and a Cardiac CT scan) உள்ளிட்ட பல்வேறு விரிவான பரிசோதனைகள் நோயாளிக்கு செய்யப்பட்டன. இதன் மூலம் ‘சைனஸ் வீனோசஸ் ஏஎஸ்டி’ என்ற குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் குறைபாட்டினால் ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் அசாதாரணமாக வலதுபுறத்திற்கு சென்றது. இதனால் நாளடைவில் இதயத்தின் வலது கீழறையில் ரத்த அளவு மிகையாக அதிகரித்து, இதயம் வழக்கத்தை விட அதிகமாக செயல்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
பொதுவாக இந்த குறைபாட்டிற்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சையே வழக்கம் என்றாலும், மருத்துவர்கள் குழு எளிய மாற்று முறையைத் தேர்ந்தெடுத்தனர். ரத்த நாளத்தின் வழியாக ஒரு சிறப்பு ஸ்டென்டை உட்செலுத்தி இதயத்தின் துளையை அடைத்து இயல்பான ரத்த ஓட்டத்தை சீரமைக்கும் ‘டிரான்ஸ்கேத்தீட்டர் குளோஷர்’ சிகிச்சை நோயாளிக்கு அளிக்கப்பட்டது.
இதயவியல் துறைத் தலைவர் மற்றும் Structural Interventions சிகிச்சைகளின் இயக்குநர், டாக்டர் R . சிவக்குமார், தலைமை இதய மயக்கவியல் நிபுணர் டாக்டர் S . குமார் மற்றும் கேத்-லேப் குழுவினர் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொண்டனர் . சிகிச்சைக்குப் பிறகு, நோயாளி 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளைத் தொடரவும், ரத்த உறைவு தடுப்பு மாத்திரைகளை தவறாமல் எடுக்கவும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சினைகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டாக்டர் R .சிவக்குமார் கூறுகையில், “விரிவான பரிசோதனைகளை மேற்கொண்டதில், ‘சைனஸ் வீனோசஸ் ஏஎஸ்டி’ என்ற அரிய குறைபாடு இருப்பது தெரிந்தது. தென் தமிழகத்தில் இத்தகைய குறைபாட்டிற்கு ‘டிரான்ஸ்கேத்தீட்டர் கவர்டு ஸ்டென்ட்’ முறையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது சில முறை மட்டுமே நடந்துள்ளது. திறந்தநிலை அறுவை சிகிச்சை தேவைப்படும் ஒரு பாதிப்பை, அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகவும் பாதுகாப்பான முறையில் சரிசெய்துள்ளோம். முதியவர்களுக்கு ஏற்படும் சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ‘கவர்டு ஸ்டென்ட்’ தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால், பல சிக்கலான இதய நோய்களை அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்ய முடியும். மூச்சுத்திணறல், சோர்வு போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை செய்வதன் மூலம் கடுமையான சிக்கல்களைத் தவிர்க்கலாம்,” என்றார்.
இம்மருத்துவமனையைச் சேர்ந்த திரு. திலீப் பெர்னார்ட், டாக்டர் S . குமார், டாக்டர் N . கணேசன், டாக்டர் S . செல்வமணி, டாக்டர் M . சம்பத்குமார், டாக்டர் ஜெயபாண்டியன், மற்றும் டாக்டர் தாமஸ் சேவியர் ஆகியோரும் உடனிருந்தனர்.
