கோவை துடியலூர் அடுத்த வட்டலலையாம் பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற, டெக் கார்டு லேப்ஸ் பவுன்டேஷன் நிறுவனத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..

கோவை துடியலூர் அடுத்த வட்டமலையாம் பாளையம் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் டெக் கார்டு லேப்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழில் மற்றும் கல்விதுறைக்கான இணைய பாதுகாப்பு சேவைகளின் துவக்கத்தை குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்த இம்மையம், இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் அடையாளமாக அமைந்தது. இதனை எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சவுந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ண விஜயகுமார், மற்றும் லட்சுமி நாராயணசாமி துரைசாமி ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்தியா பயோ பார்மாக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கர் மோகன், டெக்லேப் பவுண்டேஷன் துணை நிர்வாக இயக்குனர் டேவிட் பெலோஸ்டோஸ்கி, ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ் என் ஆர் என் சன்ஸ் நிர்வாக அறங்காவலர் சுந்தர் கூறியதாவது..
, உலகளாவிய இணைய பாதுகாப்பின் தேவைகள், தொழில்நுட்ப மேம்பாடு, மற்றும் இந்தியா இஸ்ரேல் இடையிலான, கல்வி மற்றும் தொழில் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். தென்னிந்திய தொழில்கள் , மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, மேம்பட்ட சைபர் செக்யூரிட்டி தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்பட உள்ளதாகவும், பல்வேறு கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கலந்து கொண்டு இந்த மையத்தை இன்று துவக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கும் புதிய முயற்சியின் முக்கிய நிகழ்வாக, இந்த மையம் அமையும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் பொருளாதார விவரங்களுக்கான பெங்களூரு தூதரக அதிகாரி ஒஷெரோப், எஸ்என்ஆர் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் சிவி ராம்குமார், தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ் குமார் , கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன், டெக் லேப் சீனியர் மேனேஜர் ஹரிஹரகோபால், துணைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்