கோவை அருகே பலத்த காற்று மழை காரணமாககோழிப்பண்ணைகள் முழுவதும் சேதமடைந்தனஆயிரக்கணக்கான கோழிகள் நீரில் மூழ்கி இறப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது, இதனால் பல இடங்களில் தென்னை வாழை மரங்களும் நகரில் ஊர்களில் உள்ள தெருக்களில் இருந்த மரங்களும் கீழே விழுந்து பலத்த சேதம் அடைந்தது.

இந்த நிலையில் கோவை காரமடை தேவனாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஜாய் பார்ம்ஸ் மற்றும் கே ஆர் பார்ம்ஸ் இதில் ஆயிரக்கணக்கான கோழிகளைக் கொண்ட பண்ணை செயல்பட்டு வருகிறது.

இந்த பண்ணையில் திடீர் காற்று மழையின் காரணமாக பல இடங்களில் சேதம் அடைந்து பண்ணைக்குள் மழை நீர் புகுந்தது உடனே அந்த நீரை அகற்ற முடியாமல் சூழ்நிலையில் தண்ணீரில் இருந்த ஆயிரக்கணக்கான கோழிகள் முழுமையாக இறந்துவிட்டன.

உடனடியாக இறந்த கோழிகளை அப்புறப்படுத்தியும் சேதம் அடைந்த கோழிப்பண்ணையும் சீரமைக்கும் பணியை தற்பொழுது செய்து வருகிறார்கள். இந்த திடீர் காற்றின் காரணமாக கோழிப்பண்ணை சார்ந்தவர்களுக்கு பெருத்த தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதை புதுப்பிக்கவும் புதிதாக கோழி குஞ்சுகளை விட்டு பண்ணையை தொடங்க சற்று காலதாமதம் ஏற்படும் தெரிவிக்கின்றனர்.