
வடிவமைப்புக் கல்வியில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் எனும் கல்லூரியின், 2026-ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியை ஒத்தக்கால்மண்டபத்தில் அமைந்துள்ள கல்லூரி வளாகத்தில் நடத்தியது. வடிவமைப்புத் துறையில் தங்களது கல்விப் பயணத்தைத் தொடங்கும் புதிய மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிர்வாகம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களையும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வடிவமைப்பாளர்களையும் உருவாக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன், தகவல் தொடர்பு வடிவமைப்பு, தொழில்துறை வடிவமைப்பு, இன்டீரியர் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு ஆகிய துறைகளில் இளங்கலை படிப்புகளையும், தகவல் தொடர்பு வடிவமைப்பு மற்றும் தொழில்துறை வடிவமைப்பு ஆகிய துறைகளில் முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
தொழில்துறை சார்ந்த பாடத்திட்டம், அனுபவமிக்க ஆசிரியர்கள், செய்முறை அடிப்படையிலான கற்றல், பல்துறை கல்வி முறை, புதுமை, நிலைத்தன்மை மற்றும் வடிவமைப்புச் சிந்தனைக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றால் இந்நிறுவனம் சிறப்பாக அறியப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ஆர். வைதியநாதன், மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் வரவேற்று பேசினார். மாணவர்கள் ஒரு பட்டப்படிப்பைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் நோக்கமிக்க வாழ்நாள் பயணத்தைத் தொடங்குவதற்காகவே டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைனைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில், ஜி.கே.டி. அறக்கட்டளையின் தலைமை வழிகாட்டி சவுந்தரராஜன், ஜி.கே.டி. அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் லலிதா தேவி சஞ்சய் ஜெயவர்த்தனவேலுராஜா, டி.ஜே. அகாடமி ஆஃப் டிசைன் கல்வி த்துறை தலைவர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
