தமிழகத்தின் ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நெட்வொர்க் தற்போது கோவையில் ரோர் ஈவோ எனும் இ-வெய்க்கிள் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 15 நாட்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்து அசத்தல்..

தமிழகத்தில் ஓபெண் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நெட்வொர்க் தற்சமயம், கோவை, தேனி, சேலம், காரைக்குடி, மற்றும் கடலூர் பகுதிகளில் தங்களது கிளைகளை துவங்கியுள்ளது. இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான இந்த நிறுவனம், ஒபென் ரோர் ஈவோ எனும் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா, கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள, ஒபென் எலக்ட்ரிக் நிறுவனத்தில் நடைபெற்றது. இதனை, ஒபென் நிறுவனத்தின் நிறுவனரும், முதன்மை செயல் அதிகாரியுமான மதுமிதா அகர்வால் அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது…
ரோர் ஈவோ எனும் புதிய எலக்ட்ரிக் வாகனத்தின் அறிமுகம் இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் இந்நிறுவனத்தின் கிளைகள் உள்ளது.. அதே சமயம் ஒரு ஆண்டில், 1 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் அளவுக்கு மிகபெரிய தொழிற்சாலைகளை வைத்துள்ளதாகவும், தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த ரோர் ஈவோ வாகனங்கள், அறிமுக விலையாக 99,999க்கு தமிழகம் முழுவதும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளதாகவும், மேலும் 777 க்கு முன்பதிவு செய்யபடுகின்றதாகவும் தெரிவித்தார். இந்த வகை வாகனம் ஒரு முறை முழுவதும் பேட்டரி சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடியது. இந்த வகை வாகனத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு, பொதுமக்கள் மத்தியில் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இதுவே இந்த வகை வாகனத்தின் வெற்றி என நம்புவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.