தேசிய மேடையில் மதுரை அதிரடி: கல்வி பள்ளி மாணவர்கள் 6 பதக்கங்கள் – 3 பேர் இந்திய முகாமிற்கு!

தெலங்கானா மாநிலம் கத்வாலில் நடைபெற்ற 16வது தேசிய திறந்தவெளி டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், மதுரை கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாணவர்கள், கடுமையான போட்டிகளை சமாளித்து 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த சாதனையின் சிறப்பாக, தங்கப் பதக்கம் பெற்ற மூன்று மாணவர்கள் இந்திய அளவிலான சிறப்பு பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தங்கப் பதக்க வீரர்கள்:
ஐ. சனோஜ் குமார் (12ம் வகுப்பு) – சீனியர் 85 கிலோ பிரிவு
என். ஹரிதா (7ம் வகுப்பு) – கேடட் U-45 கிலோ பிரிவு
டி. அபினேஷ் (7ம் வகுப்பு) – சப்-ஜூனியர் U-21 கிலோ பிரிவு

வெள்ளி பதக்கம்:
எஸ்.பி. கிரித்திக் பாலாஜி (2ம் வகுப்பு) – சப்-ஜூனியர் U-24 கிலோ
பிரார்த்தனா மாதவன் (4ம் வகுப்பு) – பூம்சே பிரிவு

வெண்கலம்:
ஜெய கார்த்திக் ஜி (10ம் வகுப்பு) – கேடட் U-45 கிலோ பிரிவு

போட்டியில் சாதனை படைத்து மதுரை திரும்பிய மாணவர்களுக்கு மதுரை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் துணை முதல்வர் அபிராமி கண்ணன் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மாணவர்களை பாராட்டினர்.

தேசிய அரங்கில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திய மாணவர்களுக்கும், அவர்களை தயாரித்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் திறன்களையும் மேம்படுத்தும் நோக்கில் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி தொடர்ந்து சிறப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.