ராயக்கோட்டை, நவ.26-
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிருஷ்ணகிரி ரோட்டில் வஜ்ஜிரதீர்த்தம் உள்ளது. இது மிகவும் பழைமை வாய்ந்த தீர்த்தமாகும்.
பாண்டவர்கள் வனவாசத்தின் போது நடந்தே காடுகளின் வழியாக வந்தபோது, தண்ணீர் தாகம் ஏற்படவே எங்கும் தண்ணீர் இல்லாததால், அர்ஜூனன் தன்னுடைய வில்லினால் பூமியை நோக்கி அம்பை செலுத்தி தண்ணீரை வரவழைத்துள்ளார். அந்த இடம்தான் வஜ்ஜிர தீர்த்தம் என்று கூறுகின்றனர்.
இங்கு சிறிய அளவில் வரும் தண்ணீர் பெரிய தொட்டிகளில் நிறம்பி மக்கள் குளிக்குமளவிற்கு வந்துக்கொண்டுள்ளது.
இந்த தண்ணீர் அத்தி மற்றும் வேப்பமரம் போன்ற மர வேர்களிலிருந்தும், பல்வேறு மூலிகைகளை கடந்தும் வருவதால் இது பல்வேறு நோய்களை குணமாக்குவதாக மக்கள் குளிக்கின்றனர்.
குளித்து முடித்தபின் கும்பிட வசதியாக ஈஸ்வர லிங்கமும், வள்ளி-தெய்வாணையுடன் கூடிய முருகரும், நாகர் கோவில், அனுமன் கோயில் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வணங்க ஐயப்பன கோவில் என கோயில்களும் இங்கு உள்ளன.
இக்கோவிலில் ஏராளமான திருமணங்களும் நடக்கின்றது. வசதி குறைந்தவர்கள் இந்ந கோவிலில் திருமணத்தை நடத்திக்கொள்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் குளத்தில் தூருவாச முனிவர் குளித்துவிட்டு அருகிலுள்ள மலையில் ஏறி தவம் இருந்ததாக கூறுகின்றனர். அந்த மலைக்கு சிவதூருவாசர் மலை என்று பெயர்.
இந்த மலையைதான் வரலாற்று சான்று மிக்க திப்புசுல்தான் தலைமை இடமாக கொண்டு மைசூர் வரை ஆட்சி செய்ததற்காண ஏராளமான சான்றுகள் உள்ளன.
திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் ஏற்பட்ட போரின் போது பயன்படுத்திய பீரங்கி இன்று ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேசன் முன்பு ஐ.ஜி.வால்டர்தேவாரம் அவர்களால் வைக்கப்பட்டுள்ளது
பிணி தீர்க்கும் தீர்த்தம் ராயக்கோட்டை வஜ்ஜிரதீர்த்தம்
