உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரை,இரவு 7 முதல் 8 வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன்,பொது மக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அப் பகுதியில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
எனவே, பொதுமக்கள் மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றவும், பட்டாசுகளை வெடித்து முடித்த பின் குப்பைகளை சாலையிலோ, சாக்கடைகளிளோ கொட்டாமல் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்து நமது நகரை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையர் திருமதி.இரா.அமுதா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
