பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.1.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.1.85 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடங்களை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.11.2024) கை.களத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திறந்து வைத்தார்கள்
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இன்றைய நிகழ்ச்சியில் கை.களத்தூர் மற்றும் அரும்பாவூரில் தலா ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களையும், கல்பாடி மற்றும் குரும்பலூர் பகுதிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடங்களையும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு கட்டடத்தையும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. ரூ.45 லட்சம் மதிப்பில் பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கட்டண படுக்கை பிரிவு கட்டிடப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டுமே இருந்த கட்டண படுக்கை பிரிவுகள் தற்போது மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது,.
பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆதனூர், மருவத்தூர், கொளக்காநத்தம், இலப்பைகுடிகாடு, கூடலூர், அகரம் சீகூர் மற்றும் சிறுகன்பூர் பகுதிகளிலும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசும்பலூர், வாலிகண்டபுரம், அம்மாபாளையம், சிறுவயலூர் , செஞ்சேரி மற்றும் லாடபுரம் கிழக்கு ஆகிய பகுதிளிலும் மொத்தம் ரூ. 7.75 கோடி மதிப்பில் துணை சுகாதார நிலையம், வட்டார பொது சுகாதார அலகு, ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
வணக்கத்திற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.06.2023 அன்று ரூ.25 லட்சம் செலவில் பெரம்பலூர் நகராட்சியில், அரணாரை நகர்புற நலவாழ்வு மையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.1.20 கோடி மதிப்பில் கீழப்புலியூர் ஊரக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. விரைவில் அந்த புதிய ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்வதற்கான ஆணை நிதித்துறையிடமிருந்து பெறப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். விரைவில் தமிழ்நாட்டில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெல்லி சென்றபோது, ஆம்ஆத்மி மொகல்லா கிளிக்ன்ஸ் என்ற பெயரில் மருத்துவர், செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட நான்கு பணியிடங்களை உள்ளடக்கிய நகர்ப்புற மருத்துவமனை மிக பிரபலமாக இருந்ததை பார்வையிட்டார். அதன் பின்னர், நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கட்டப்படும் என 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். அறிவித்து 8 மாதத்திற்குள் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக 500 மருத்துவமனைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாட்டில் 8,713 துணை சுகாதார நிலையங்ள், 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என சுமார் 13,000க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளது. இவற்றையெல்லாம் மாவட்டம் வாரியான பயணங்களின்போது திடீர் ஆய்வு நடத்தி பார்வையிடுவது என் வழக்கம். அதைப்போன்று இன்று காரை அரசு மருத்துவமனை மற்றும கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு செய்தோம். காரை அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தார்கள். குறைந்தபட்சம் ஆறு மருத்துவர்களாவது இருக்க வேண்டிய அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் மட்டும் உள்ளார்கள். இந்த மருத்துவமனை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்போது அதற்குண்டான மருத்துவர்களின் பணியிடங்களை பெற்று தரம் உயர்த்தியிருக்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் உரிய பணியிடங்கள் இல்லாமல் இருப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தேன்.
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் காரை, கிருஷ்ணாபுரம், வேப்பூர், உடையார்பாளையம் மற்றும் செந்துறை ஆகிய 5 மருத்துவமனைகள் உள்ளதாக இணை இயக்குநர் தெரிவித்தார். இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பணியிடத்தை நிரப்பாமல், தரம் உயர்த்தியுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.3.50கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. காரை அரசு மருத்துவமனையில் 20 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணியும், வேப்பூர், உடையார்பாளையம், அரசு மருத்துவமனைகளில் தலா ரூ.3.50கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளது.
செந்துறை அரசு மருத்துவமனையில் ரூ.23.75 கோடி மதிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான கட்டடம் கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றது. கடந்த கால ஆட்சியில் பெயர் பலகையில் மட்டுமே அரசு மருத்துமனைகளாக தரம் உயர்த்தப்பட்டவை தற்போது புதிய கட்டடங்கள், புதிய பணியிடங்கள் என வளர்ச்சியடைந்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், லப்பைக்குடிக்காடு வடக்கு, லப்பைக்குடிக்காடு தெற்கு, பெரம்பலூர் தெற்கு, சாமியப்பாநகர், பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.2.25 கோடி மதிப்பில் துணை சுகாதார நிலையங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அமெரிக்கா நியூயார்க் நகரில் ஐ.நா.வின் பொது கூட்டம் கூடியது. உலக நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு , உலகின் உச்சபட்ச அதிகாரத்தை கொண்ட அமைப்பு ஐக்கிய நாடுகள் சபை. தமிழ்நாட்டிற்கு united nation interagency task force award என்ற விருது அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையால் ஒரு மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்ட முதல் விருது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தில் மக்களை வீடு தேடிச்சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இத்திட்டத்தை தொடங்கிவைக்கப்படும்போது, விரைவில் ஒரு கோடி பயனாளிகளுக்கு இத்திட்டம் சென்று சேரும் என அறிவித்தார்கள. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் இன்று இத்திட்டம் 1,99,79,674 நபர்களை சென்றடைந்திருக்கின்றது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் 2 கோடியாவது பயனாளிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மருந்து பெட்டகம் வழங்கப்படவுள்ளது.
விபத்துக்குள்ளானவரை காப்பாற்றும் நம்மை காக்கும் 48 திட்டத்தில், சாலை விபத்து ஏற்பட்டவுடன் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கும் நபருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்ததோடு, விபத்துக்குள்ளான நபரை விபத்து நடைபெற்ற 48 மணிநேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கும் நபருக்கு ரூ.1லட்சம் அரசு ஊக்கத்தொகை வழங்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்கள். 2,99,631 நபர்கள் இத்திட்டத்தில் பயன் பெற்றுள்ளார்கள். மேலும், 1 லட்சம் என்ற ஊக்கத்தொகையினை 2 லட்சமான உயர்த்தி வழங்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதுபோன்ற திட்டங்கள் உலகத்தில் வேறு எங்கும் செயல்படுத்தப்படவில்லை.
இதயம் காப்போம் என்ற திட்டம் திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதயக்கோளரால், மாரடைப்பால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உரிய முதலுதவி அளித்து அருகில் உள்ள உயர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏதுவாக, உயர் மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்லும் நேரத்தில் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் லோடிங் டோஸ் எனப்படும் மூன்று மருந்துகளை அளித்து, கோல்டன் ஹவர்ஸில் உயிர் காக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 11,957 நபர்கள் பயன் பெற்றுள்ளார்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறு தெரிவித்தார்.

            அதனைத்தொடர்ந்து, இதயம் காப்போம் திட்டத்தில் பயனடைந்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள பெருநிலாவைச்சேரந்த 62 வயதான அன்பழகன் என்பவர், இத்திட்டத்தின் பயன் குறித்து தெரிவித்து, இத்திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். 

பின்னர், முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், யானைக்கால் நோய்தடுப்பு திட்டம், தேசிய தொழுநோய் தடுப்பு திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
முன்னதாக காரை மற்றும் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு, உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் திரு.சி.இராஜேந்திரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை (சென்னை) இணை இயக்குநர் (ஆரம்ப சுகாதார நிலையங்கள்) மரு.செந்தில்குமார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), திரு.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.எம்.கீதா, அட்மா தலைவர் திரு. வீ.ஜெகதீசன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.ஜாக்குலின் சித்ரா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் திருமதி மகாதேவி ஜெயபால், திரு.டி.சி.பாஸ்கர், மரு.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர் திரு.நவமணி குமரி ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.துரைசாமி, கை.களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுமதி முருகேசன், வாலிகண்டபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரேம்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.