ராமநாதபுரத்தில் தே.மு.தி.க சார்பில் தி.மு.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!!

ராமநாதபுரம் அரண்மனை முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக கைது செய்து விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும்,போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றும்,பொங்கல் பரிசாக பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் ஆண்டுதோறும் வழங்கிய ரூ.1000 உடனே வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் தமிழக முழுவதும் ஆங்காங்கே பாலியல் பிரச்சனை நடப்பதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தினர்.இதில் ராமநாதபுரம் நகர செயலாளர் பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார்,ரங்கநாதன்,பரமக்குடி நகர் செயலாளர் அன்பு,மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி,ஊராட்சி கழகச் செயலாளர் பெருங்குளம் செல்வராஜ்,முத்துக்கனி,மாவட்ட அவைத்தலைவர் வைத்தியநாதன், மாவட்ட பொருளாளர் ராமநாதன், மாநில செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான தர்மராஜ்,கதிர்வேலன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன்,நம்பிஹரிராம்,நயினார் கோவில் ஒன்றிய செயலாளர் இருளாண்டி,பரமக்குடி ஒன்றிய செயலாளர் சந்திரபிரகாஷ், இப்ராஹிம்,உட்பட பலர் கலந்து கொண்டு தி.மு.க அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.