விருதுநகர் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை காவல் அதிகாரி பணியிடை நீக்கம்

Oplus_0

ராஜபாளையத்தில் மது போதையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பாளரை பணி நீக்கம் செய்து மாவட்டக் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தும்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (54) காவலராக பணிபுரிந்து தற்போது பதவி உயர்வு பெற்று தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்

அவருக்குத் திருமணம் ஆகி மனைவி மற்றும் மகன் மகள் உள்ளனர் இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த பெண் காவலருக்கு மது போதையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது விசாரணையில் அவர் பணி நேரத்தில் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவரை தற்போது பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்