சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக உணவு தினத்தினையொட்டி உணவுத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர். பழனிச்சாமி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கவினா, துணைத்தலைவர் அர்ச்சனா, முன்னாள் தலைவர் ராசாத்தி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இரிஷிவந்தியம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ் மற்றும் பகண்டைக் கூட்டுச்சாலை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டியும் வாழ்த்தியும் உற்சாகம் ஊட்டக்கூடிய ஆலோசனைகளையும்,அறிவுகளையும் வழங்கி சிறப்பித்தார்கள். நிகழ்வில் மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் சமைத்து எடுத்து வந்த பலவித வகையான உணவு பொருட்களை பார்வையாளர்கள் கண்டு களித்து மாணவருடைய உணவின் வகை மற்றும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி மாணவர்களிடையே வினாக்கள் எழுப்பி மாணவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் சிறந்த உணவு பொருள்களை எடுத்து வந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட
4,5 வகுப்பு மாணவர்களில் முதல் பரிசு கிருத்திகா,
இரண்டாம் பரிசு ரோஷன், மூன்றாம் பரிசு தேவன்,
மற்றும் ஒன்று, இரண்டு, மூன்று, வகுப்புகளுக்கான மாணவர்களிடையே கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை அளித்த மாணவர்கள் மற்றும் உணவின் வகைகளை அறிந்து அதில் முதல் பரிசு தருண், இரண்டாம் பரிசு யாழிசை, மூன்றாம் பரிசு மாணவர் துர்ஷன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டன. அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு ரோஹித்,
இரண்டாம் பரிசு தீபக், மூன்றாம் பரிசு யோகஸ்ரீ,ஆகிய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்வில் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. மேலும் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கூடுதலாக மாற்றுப் பணி மூலம் ஆசிரியர் நியமனம் செய்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றியும் அதற்கு வழிவகை செய்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் கஜேந்திரன் மற்றும் தில்லைக்கரசி ஆகியோர்களுக்கு நன்றி கூறினார்கள் மாற்றுப் பணி மூலம் நியமனம் பெற்ற லியோ அந்தோணி மாணவர்களின் செயல்களைக் கண்டுகளித்து மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் இறுதியில் உதவி ஆசிரியர் யேசுதாஸ் நன்றி கூறினார்.
