தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக மாவட்டத் துணை ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தர்மபுரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என் .கிருஷ்ணன்,
மாவட்ட செயலாளர் திரு.எஸ்.சிவனேசன் ,
நகரப் பிரதிநிதி
திரு பாஸ்கரன்
திரு. எழிலரசு மற்றும் பென்னாகரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மாங்கரை திரு.சம்பத்குமார் திரு.பெரியசாமி மற்றும் திருமதி.மீனாட்சி ஆகியோர் இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர்கள் பங்கேற்ற பேரணி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் இருந்து இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற பேரனியில்150 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
இப்பேரணியில் நுகர்வோர் பயன்பாடு குறித்தும் தரமான பொருட்கள், சரியான எடை அளவு, கலப்படமற்ற பொருள், கலப்படம் கண்டறிதல் ,பிளாஸ்டிக் பயன்பாடு குறைத்தல் ,மற்றும் போதை வஸ்துக்கள் பான்பராக், ஜர்தா ,குட்கா ,பான்மசாலா , புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் தொடர்பாக பதாகைகளுடன் மாணவர்கள் பேரணியாக சென்று சிறப்பித்தனர்.
இறுதியில் இலக்கியம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் நன்றி கூறினார்
