
கோவை காந்திபுரம் அடுத்த ராம்நகர் பகுதியில் உள்ள ஐயப்ப பூஜா சங்கவளாகத்தில் வரும் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் தினோத்ஸவத்தின் 33 வது ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ மஹோத்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று கோவை பந்தய சாலையில் நடைபெற்றது அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய விழா குழு
தலைவர் வழக்கறிஞர் சுந்தரவடிவேலு, செயலாளர் ராம்ராஜ்,
அமைப்பாளர் ஸ்ரீனிவாச பட் ஆகியோர் கூறியதாவது..
கோவையில் 33வது ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ மஹோத்ஸவ நிகழ்ச்சி கோவை ராம் நகரில் உள்ள ஐயப்ப பூஜா சங்க வளாகத்தில் வரும் பிப்ரவரி மாதம், 18ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தினமும் ஒவ்வொரு சிறப்பு வழிபாடுகள், பஜனைகள், பூஜைகள், அபிசேகங்கங்கள் ராகவேந்திரக்கு நடைபெற உள்ளதாகவும், ஒரு வாரத்தில் உள்ள 7 தினங்களும் பல்வேறு விசேஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் 450வது பட்டாபிஷேக தினமாகவும், 431வது வர்தந்தி உற்சவமாகவும் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மடாலய சுவாமிகள், மூத்த குருமார்கள், மடாதிபதிகள், கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளதாகவும், ராகவேந்திர ஸ்வாமிகளின் தீவிர பக்தர்களான திரைப்பட நடிகர்கள் நடிகர் ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், ஆகியோருக்கும் இந்த பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர்களும் நிச்சயமாக இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று நம்புவதாக தெரிவித்தனர். மேலும் ஒரு வார காலத்திற்கு நடக்கும் இந்த சிறப்பு பூஜைகள் அனைத்தையும் கண்டு வழிபட, பொதுமக்களுக்கு இலவச தரிசனம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பெற்று செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
