
கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள, சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது.
பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள்,நகைகள்,சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சியாக கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் கோ கிளாம் தமது விற்பனை கண்காட்சியை துவங்கியது. ஜனவரி 09,10,11,ந்;தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன குறிப்பாக பொங்கல் பண்டிகை வருவதையொட்டி பெண்களுக்கான பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளனமுன்னதாக,
கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,வசந்தி ,டாக்டர் நந்தினி,ராதிகா,மகாலட்சுமி,ஆர்த்தி,காயத்ரி,நிவி,மதுகண்ணன்,சஞ்சுக்தா நந்தினி,சந்திரா அக்கா,
ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்…
கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,
இந்த ஆண்டு பொங்கல்
சிறப்பு விற்பனை கண்காட்சியாக துவங்கப்பட்டுள்ளதாகவும், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான சிறப்பு தள்ளுபடியுடன் அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள், கொல்கத்தா,லூதியானா,குஜராத், டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தார்
