
திருப்பத்தூர் மாவட்டம் செளடேகுப்பம் கிராமத்தில் , தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். மரியா ஆன்டனிராஜ் அவர்களின் வழிகாட்டுதலின்படி கிறிஸ்மஸை வரவேற்கும் விதமாக எம்பிஏ துறைத் தலைவர் டாக்டர். சசிகுமார் அவர்களின் தலைமையில், தூய நெஞ்சக் கல்லூரி எம்பிஏ மாணவர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள் லாரன்ஸ், சசிகாந்த், ஜோசப் சந்தோஷ்குமார், ரஞ்சிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் முத்துக்குமரன் அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதாகிருட்டிணன் வாழ்த்துரை வழங்கினர். மாணவ -மாணவிகளின் நடனம், விழிப்புணர்வு நாடகம், பாடல் என்று மிக சிறப்பாக நடைபெற்றது.ஏழை எளிய மக்களுக்கான குளிக்காலபோர்வைகள், மளிகை பொருட்கள், எம்பிஏ துறை சார்ந்த மாணவ – மாணவிகளால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
