
தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக பெண்ணாகரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட தாய் சேய் நல கூடுதல் கட்டிடத்தை சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற குழுவினர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர் இந்த ஆய்வில் மருத்துவமனையில் சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகின்றன மகப்பேறு தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் குறித்தும் பச்சிளம் குழந்தைகள் பராமரிக்கும் அறைகள் குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்கள் இடம் எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன குறித்தும் பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணி பெண்களிடம் தலைமை மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் அரசால் வழங்கப்படும் இலவச கர்ப்பிணி பெண்கள் பெட்டகம் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டும் அங்கு வந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் மகப்பேறு தாய்மார்கள் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி அரசு தலைமை மருத்துவமனையில் சாலை வசதி வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து பொதுப்பணித்துறை நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினை மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி அனுமதி பெற்று தார் சாலை அமைக்கும் பணி நடைபெறும். அதேபோல் மருத்துவமனை சுற்றி சுற்றுலா அமைக்க கோரி கோரிக்கை வைத்ததை அடுத்து தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நிதி வந்தவுடன் சுற்று சுவர் அமைக்கப்பட்டு தருமபுரி மாவட்டத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளுடனும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சேவை செய்யும் எனவும் தெரிவித்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் மருத்துவ இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாந்தி , மாவட்ட தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் கனிமொழி மற்றும் சட்டமன்ற உறுதிமொழி குழு மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு அலுவலர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்
