அழிந்து வரக்கூடிய பாரம்பரியமிக்க கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், ஜமாப், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கோவை இருகூர் அடுத்த குரும்பபாளையம் கிராமத்தில், நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சி..

அழிந்து வரக்கூடிய பாரம்பரியமிக்க கலைகளான ஒயிலாட்டம், காவடியாட்டம், ஜமாப், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு கோவை மாவட்டம், பட்டணம் எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில், செயல்பட்டு வரும் கார்ஸ் 327 நிறுவனம் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இந்த கலைகளில் ஆர்வம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளித்து வருகிறது. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும் முறையான பயிற்சி அளித்து அவர்களை நம்முடைய பாரம்பரிய கலைகளில் சிறந்த கலைஞர்களாக மாற்றுவது தங்களுடைய லட்சியம், என்றும் தற்சமயம் இளைய தலைமுறைகள் செல்ஃபோன், கம்ப்யூட்டர், போதை பொருட்கள், உள்ளிட்டவைகளுக்கு அடிமையாகி கிடப்பதால் பழங்கால கலைகள் மறைந்து வருகின்றது, எனவே நம்முடைய பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பொருட்டு தற்சமயம் இந்த கலைகளை ஊக்குவித்து வருவதாகவும் இதற்கு வேண்டிய உதவிகளை தங்களுடைய நிறுவனம் செய்து தரும் என்றும் தெரிவித்தனர். அதில் ஒரு பகுதியாக இன்று கோவை இருகூர் அடுத்த குரும்பபாளையம் கிராமத்தில், அந்த கிராம மக்கள் கலந்து கொண்ட ஒயிலாட்டம், காவடி ஆட்டம், ஜமாப் மற்றும் சிலம்பாட்டம், உள்ளிட்ட கலைகளில் பயிற்சி பெற்ற ஏராளமானவர் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.