
கோவை பந்தய சாலையில், உள்ள தனியார் அரங்கில் இன்று ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களான, ரோட்டேரியன் ராம்ஜி ராகவன், டாக்டர் தியாகு, ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில்
வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஒருங்கிணைந்த ஸ்டார்ட் அப் மாநாடு மற்றும் கோழிப்பண்ணை கண்காட்சி 2026 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், தொழில் முனைவோரை உருவாக்குதல், நவீன கோழிப்பண்ணை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில், மற்றும் வேளாண்மை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதாகும் என தெரிவித்தனர். பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பல்லடம், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர், மற்றும் கோழிப்பண்ணைத் துறையினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், கிராமப்புற வாழ்வாதார மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தில், கோழிப்பண்ணைத் துறையின் முக்கிய பங்களிப்பை முன்னிறுத்தும் இந்த கண்காட்சி புதிய தொழில் முனைவோர் விவசாயிகள் மற்றும் தொழில் சார்ந்த நிறுவனங்களை ஒரே தளத்தின் கீழ் இணைக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தனர். இதில் நவீன தீவன உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணை உபகரண உற்பத்தியாளர்கள், கால்நடை மருத்துவ சேவை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மற்றும் அதன்சார் தொடர்புடைய தொழில் நிறுவனங்கள், பங்கேற்க உள்ளது எனவும், இக்கண்காட்சியில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, கண்காட்சியுடன் இணைந்து, சிறப்பு நிபுணர்களின் உரையாடல்கள், கலந்துரையாடல்கள், அமர்வுகள், வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர் சந்திப்பு, உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி அரங்குகளை கண்காட்சியின் தலைவரும் கே.சி.டி தலைவருமான டாக்டர் கிருஷ்ணராஜ் வானவராயர் திறந்து வைக்க உள்ளதாகவும், சாந்தி பீட்ஸ் நிர்வாக இயக்குனர் லட்சுமணன், சுவாதி ஹேட்சரீஸ் நிர்வாக இயக்குனர் சின்னச்சாமி, உள்ளிட்ட பலர் இந்த கண்காட்சிகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
