
உலகிலேயே முதன்முறையாக நேரடி பாரா கிரிக்கெட் வீரர்கள் ஏல நிகழ்ச்சி கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் நான்கு அணிகளுக்காக பிரிக்க பட்டு, ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஆதரவாளர்கள், ரோட்டரி மற்றும் ரோட்டராக்ட் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காலக்ஸி சார்பில், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கிரிக்கெட் சங்கத்தின் இணைப்புடன் நடைபெறும் ஐபிசிஎல் 3.0 எனும் போட்டித் தொடர், வரும் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது
இந்த போட்டிகளானது இந்திய அளவில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு சமமான வாய்ப்பையும், அங்கீகாரத்தையும் வழங்கும் நோக்கில் நடைபெறும் இந்த முயற்சி, விளையாட்டு மூலம் உள்ளடக்கத்தை வலியுறுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 113 விளையாட்டு வீரர்கள், கலந்து கொண்டனர் அதில்
60 வீரர்களை மட்டம்
ஏலத்தில் எடுத்துள்ளனர் அதில்,
ரேஜிங் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை சேர்ந்த, வியானை வீணை பள்ளி உரிமையிலான அணி ஏலம் எடுத்துள்ளது. டெல்லி யூனிகார்ன்ஸை ரோட்டரி யூனிகார்ன்ஸ் உரிமையிலான அணி ஏலம் எடுத்துள்ளது. கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ், 365 ஜாப் ரெடி ஆன்லைன் அகாடமி உரிமையிலான அணியை ஏலம் எடுத்துள்ளது. தமிழ்நாடு டவுன்டவுன் டைகர்ஸை, ரோட்டேரியன் காட்வின் மரியா விஸ்வாசம் உரிமையிலான அணி ஏலம் எடுத்துள்ளது. இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியின் தலைவர் ஆக ரோட்டராக்டர் மிதுன் மற்றும் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காலக்ஸியின் கழகத் தலைவர் ஆக ரோட்டராக்டர் ஜெயா கிஷோர் ஆகியோர் நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
