
டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டுள்ள பள்ளியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
தமிழக மாணவர்களுக்கு உயர்தரமான கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கோவையில் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை வழங்கும் வகையில் வேன்கார்டு அகாடமி என்ற பெயரில் ஒரு புதிய பள்ளி கட்டிடம் காளப்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது.
கே.எம்.சி.ஹெச் மற்றும் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை,தலைவர்டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில்,தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தஅன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை, துணை தலைவர்,மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி,, ஆகியோர் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளியின் செயல்பாடு குறித்து பேசிய, கே.எம்.சி.ஹெச் மற்றும் டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை,தலைவர்டாக்டர் நல்லா ஜி பழனிசாமி,
மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை தற்போது துவங்கி உள்ள வேன்கார்டு அகாடமி வழங்க உள்ளதாக தெரிவித்தார்..
குறிப்பாக மேலை நாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்புவர்களுக்கு வேன்கார்டு நல்ல தேர்வாக இருக்கும் என அவர் தெரிவித்தார்..
புதிய வேன்கார்டு அகாடமி பள்ளியில்,2025 – 26 கல்வியாண்டில் சிறுகுழந்தைகளுக்கான சேர்க்கை விரைவில் துவங்கும் எனவும் 2026 – 27 கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
