கோவை கணபதி பகுதியில் பெப்ஸ் நிறுவனத்தின் “கிரேட் ஸ்லீப் ஸ்டோர்” துவங்கப்பட்டது.ரீடெய்ல் விற்பனையை விரிவாக்கும் வகையில் பெப்ஸ் ஸ்லீப்ஸ் ஸ்டோர் அதிகரிக்க உள்ளதாக பெப்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உறக்க அனுபவத்தை இனிமையாக்கும் வகையில் ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் மெத்தைகள் தயாரிப்பு நிறுவனமான பிரபல பெப்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை தொடர்ந்து சந்தையில் அறிமுகபடுத்தி வருகின்றனர்..
இந்நிலையில் தனது ரீடெய்ல் விற்பனையை விரிவு படுத்தும் விதமாகங பெப்ஸ் நிறுவனம் கோவை கணபதி பகுதியில் தனது புதிய பிரத்யேக பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோரை துவக்கி உள்ளது..
இதற்கான துவக்க விழாவில்,பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சி.என். ராஜேஷ் இந்த புதிய ஸ்டோரை திறந்து வைத்தார்.

தற்கால நவீன யுகத்திற்கு ஏற்றவாறு, சிறப்பான உறக்க அனுபவ மையமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் பெப்ஸ் கிரேட் ஸ்லீப் ஸ்டோரில் இந்த பிராண்டின் சிறந்த தயாரிப்புகளான ஸ்பிரிங், ஃபோம் மற்றும் காயர் மெத்தைகள், ப்ரீமியம் தலையணைகள், மெத்தைகளுக்கான பாதுகாப்பு உறைகள் மற்றும் உறக்கத்திற்கு உதவும் துணைப் பொருட்களின் முழுமையான தொகுப்பை வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பார்த்து, விளக்கங்கள் பெற்று,வாங்கும் வாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் நவீன வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு, பெப்ஸ் கம்ஃபர்ட், பெப்ஸ் சுப்ரீம், பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம், பெப்ஸ் சுப்ரீயர் ஸ்பிரிங் என்ற பெயர்களில் நான்கு மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொகுப்புகளை பெப்ஸ் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஒவ்வொன்றும் மிகச்சிறந்த உடல் ஆதரவு, சொகுசு மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கும் தன்மையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக
பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் – ன் துணைத் தலைவர் சி. என். ராஜேஷ் தெரிவித்தார்..
தற்போது இந்தியா முழுவதும் 5,000-க்கும் மேற்பட்ட மல்டி-பிராண்டு விற்பனையகங்கள் மற்றும் 91 பிரத்யேக ஸ்டோர்கள் மூலம் பெப்ஸ் தனது சேவையை வழங்கி வருகிறது. இனிவரும் ஆண்டுகளில், முக்கிய நகரங்களிலும் மற்றும் வளர்ந்து வரும் சிறுநகரங்களிலும் தனது பிரத்யேக ‘கிரேட் ஸ்லீப் ஸ்டோர்களை’ நிறுவி தனது ரீடெய்ல் வலையமைப்பை விரிவுபடுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்..