
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் கோவை சிவாஜி காலனியில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா என்ற 29,
வயதான இளைஞருக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கரணியா என்ற 21 வயது பெண்ணுக்கும், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, இக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் புஸ்பானந்தம் தலைமையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் வேறு, வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் அவர்களது திருமணம் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தலைமையில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில், மணமகனின் தாய், புஷ்பராணி, தந்தை நாகநாதன், மணமகளின் உறவினர்கள் மற்றும் பிரமீளா, தர்மராஜ், கண்ணன், உமேஸ்வரி, மலுமிச்சம்பட்டி திமுக கவுன்சிலர் மணிக்குட்டி, குமாஸ்தாக்கள் லட்சுமி, திவ்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
