கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதனை கவுண்டம் பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிடம் மனுக்களாக வழங்கினர். அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்..

கடுமையான டீசல் விலை உயர்வு, லாரிகளுக்கு பொறுத்த படும் ஜிபிஎஸ் கருவிகளின் விலை உயர்வு, சாலை வரி, சேவை வரி என பல்வேறு விலைஉயர்வுகளை கண்டித்தும், அதிக பாரம் ஏற்றி வரும் செங்கல் லாரிகளை, தொடர்ச்சியாக அபராதம் விதிக்கும் காவல்துறையினர், மற்றம் ஆர்டிஓ அதிகாரிகள், என பல்வேறு இடையூறுகளை சந்தித்து வரும் செங்கல் லாரி உரிமையாளர்கள் இனி, பாசிங் டன் என்றழைக்கப்படும், அரசு அனுமதி அளித்த அளவில் லாரிகளை இயக்க உள்ளதாகவும், ஜிஎஸ்டி பில் தராத செங்கல் சூளைகளில் இருந்து செங்கள்களை எடுத்து வர மாட்டோம். மது அருந்தி லாரி ஓட்டுநர்களை லாரிகளை இயக்க அனுமதிக்க மாட்டோம், சீறுடை இன்றி லாரிகளை இயக்க அனுமதிக்க மாட்டோம் அரசு தெரிவித்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொழில் நடத்துவோம். ஆனால் இதற்கு பல்வேறு இடையூறுகளை நாங்கள் சந்திக்க நேரிடும், அதற்க்கு அரசு எங்களுடன் துனை நிற்க வேண்டும் என்று, கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கோவை கவுண்டம் பாளையம் பகுதி தவெக சட்ட மன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்று கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் உங்களது கோரிக்கை நியாமானது தான் இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். அப்பொழுது கோவை மாநகரில் 5 வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. எங்களது சங்க கோரிக்கை களின் விதிமுறைகளுக்கு கட்டுபடாமல், அதிக டன் ஏற்றி வரும் வாகனங்களை வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து, அவர்களுக்கும், அரசின் விதிகளுக்கு கட்டு பட்டு வாகனங்களை இயக்க உத்தர விட வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் இது குறித்து அமைச்சரிடம் பேசி, இது சம்பந்தமாக விரைவில் நல்ல முடிவை எடுத்து உங்களுக்கு உதவுவதாக தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியின் பொழுது ஆர்.எஸ்.ஆர் செல்வராஜ், ரமேஷ், ராஜேஷ், அருண் ராஜ், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.