கோவை சிவாஜி காலனி பகுதியில் உள்ள, வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இல்லத்தில், பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக இரவு சுவிஷேச சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பலர் கலந்து கோண்டு கிறிஸ்தவ பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர்.

கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ளது இங்கு, பெத்லஹேம் ஜாய் ஜெபவீட்டின் சார்பாக, இரவு சுவிஷேச சிறப்பு ஆராதனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
இயேசுவின் அன்பின் ஊழிய போதகர் கனகராஜ், சிஸ்டர் பெரில், நாகர்கோவில் போதகர் வின்சென்ட், தலைமை மூப்பர் சந்திரன், மற்றும் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பு ஆராதனை நடத்தினர். அப்பொழுது இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், நோய் நொடியின்றி, வாழ வேண்டும். அதற்க்கு உண்டான அனைத்து தேவைகளையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்து தர வேண்டும் என்று கேட்டு கொள்ள பட்டது. தொடர்த்து தேவ துதி பாடல்கள், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பைபில் வாசகங்களில் உள்ள முக்கிய குறிப்புகளை எடுத்து போதகர் பாடல்கள் பாடி இந்த விஷேச ஆராதனையை வழி நடத்தினர். இதில் சிறப்பு செய்தி போதகர் ஜான் பீட்டர், செய்திகளை அளித்தார். விழாவினை ஓருங்கினைத்து போதகர் ஜெயக்குமார் வழி நடத்தினார்.
இக்கூட்டத்தில் பாஸ்டரம்மா ஜாய் ஜான் பீட்டர், கங்கா சந்திரன், மெரிஸி ஜெயக்குமார், அரசு போக்குவரத்து துறை ஓட்டுநர் ராஜேஷ், சத்யா, துரை ராஜ், மேரி, சிஸ்டர் எலிசபெத் சீலா, சுரேஷ், ஜெபா, வர்ஷா, வர்ஷினி, மோகன் ராஜா, ஞானமணி, வழக்கறிஞர் குமாஸ்தா லட்சுமி, ராதிகா சுனில் குமார், டேனிக்கா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.