பென்னாகரம் அருகே மாங்கரை அரசு பள்ளிக்குதனியார் நிறுவனத்தின் மூலம் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கல்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளிகள் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் கிரெடிட் அக்சஸ் இந்தியா பவுண்டேஷன் மூலம் அரசு பள்ளிக்கு தேவையான டேபிள், பெஞ்ச் ,கரும்பலகை சேர்கள் உள்ளிட்ட 1லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.பாலக்கோடு வனவர் முனுசாமி முன்னிலை வகித்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெக்கேஷ் வரவேற்றார். இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள் சார்பாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அரசு பள்ளிகளிலேயே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் அரசு பள்ளி தனியார் பள்ளிகளை விட முன்மாதிரியாக விளங்கி வருவதாகவும் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உரையாற்றினர் இந்த நிகழ்ச்சியில் கிரெடிட் அக்சஸ் மண்டல மேலாளர் பசுவராஜ் கலந்துகொண்டு பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மணிகண்டன், தங்கமணி, மாரிமுத்து மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்