மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தனியார் பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச்வாலிபால் போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில்
மாணவிகள் பீச் வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் ஹரிஷ், பிரதிப்குமார் என்ற மாணவர்களும் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சஞ்சய், விஷ்வா என்ற மாணவர்கள் வெண்கலப்பதக்கம் வென்றனர். பதக்கம் வென்று ரயில் மூலம் சீர்காழி வருகைபுரிந்த மாணவ,மாணவிகளை ரயில் நிலையத்தில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், பள்ளியின் தாளாளர் ஆதித்யா ராஜ்கமல் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் மாலை அணிவித்து பேண்டு வாத்தியம் முழங்க அழைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மாணவர்களை பாராட்டு விதமாக மயிலாடுதுறை தருமபுர ஆதீன ஆஸ்தான பாடகர், கிராமிய இசை கலாநிதி, திரைப்பட பின்னணி இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கிடையே பேசுகையில்…. மாணவர்கள் பள்ளி பருவத்தில் மிக கடுமைய படிக்க வேண்டும், பல சாதனைகள் புரிவதற்கு இந்த பள்ளி பருவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், வெற்றி பெற்ற மாணவர்களை பார்க்கும் பொழுது நான் சிறுவயதில் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இதே போல் பரிசு பெற்ற ஞாபகம் வருகிறது, பரிசுகளை வென்றதால் அதை சரியான முறையில் பயன்படுத்தியதால் இன்று இந்த உச்ச நிலைக்கு அடைந்திருக்கிறேன். அதேபோல் மாணவர்கள் கடுமையாக படிக்க வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக பதக்கங்கள் வென்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியளித்த ஆசிரியர்களான சதீஷ் மற்றும் நித்தியா ஆகியோர்களுக்கு கேடயங்களும், நினைவு பரிசுகளையும் வழங்கினார்.
மேலும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்காக “பத்து மாசம் என்னை சுமந்து பெற்று எடுத்த அம்மா” பாடலை பாடி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.
