ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! ஆட்டோ ஒட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றது. தினமும் பள்ளிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆட்டோ ஓட்டுனர் கணேசன் என்பவர் என்பவரது ஆட்டோவில் காலையில் சென்று மீண்டும் மாலையில் அவரது ஆட்டோவிலே வீட்டிற்க்கு வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை, வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக குழந்தை வீட்டிற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் குழந்தையை தனியாக அழைத்துச் சென்று ஏன் காலதாமதம் என்று விசாரித்த பொழுது, ஆட்டோ ஓட்டுனர் கணேசன் சிறுமிக்கு தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சற்றும் தாமதிக்காமல் இது சம்பந்தமாக, ராமநாதபுரம் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆட்டோ ஒட்டுநர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தியதில், இச்சம்பவம் உண்மை என்பது தெரியவந்தது. தொடர்ந்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆட்டோ ஒட்டுநரை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.. இந்த நிலையில் கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது