திருமங்கலம் பாமக ஒன்றிய செயலாளர் ராஜபாண்டியனை தாக்கிய அன்புமணி (பாமக) தரப்பு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் மருத்துவர் ராமதாஸ் பாமக சார்பில் புகார் மனு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையேற்று வழிநடத்தம் பாட்டாளிமக்கள் கட்சியின், தெற்கு மாவட்ட செயலாளர் தா.முருகன் தலைமையில், மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ, குரு , வடக்கு மாவட்ட செயலாளர் கிட்டு, மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் குருபாலமுருகன் வடக்கு மாவட்ட தலைவர் ராஜாராம் மாநில துணை தலைவர் வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள்
அன்புமணி தரப்பு பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் மனுவில் எங்களது கட்சியின் திருமங்கலம் ஒன்றிய செயலாளராக இருந்துவரும் ராஜபாண்டியன் என்பவரை, அன்புமணி தலைமையிலான பா.ம.க.வை சேர்ந்த மதுரை மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் என்பார் நேற்று மாலை 4.30 மணியளவில் மதுரை திலகர் திடல் பாலம் சாலையில் அடியாட்களுடன், பயங்கர ஆயுதங்களுடன், காரில் வந்து வழிமறித்து, கடுமையாக அடித்து துன்புறுத்தி, வெட்டி , கள்ளதுப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவாதாக, கொலைமிரட்டல் விடுத்துள்ளனர், காட்டுமிராண்டி தனமாக தாக்கிய இந்த செயல் தமிழகம் முழுவதும், மோதல்களையும் , கலவரங்களையும், மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்களும் ஏற்படுவதாக உள்ளது. எனவே , இதுபோன்று கலவரத்தை தூண்டுபவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியும், கொலைமிரட்டல் செய்தவர்கள் மீது சட்டப்படியான நவடிக்கை எடுத்து அமைதிய ஏற்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்