தமிழ் நாட்டின் மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம் -கருணாநிதி ஸ்டாலின் போல பதவிக்காக மத்திய அரசு காலில் விழவில்லை -வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று தனது ஆதரவாளர்களுடன் கப்பலூர் சுங்கச்சாவடியில் இருந்து தேர்தல் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்துதேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சிவஜோதியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உண்மையாக நாணயமாக உழைக்கும் காரணத்தினால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி இந்த எளிய தொண்டனுக்கு நான்காவது முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். திருமங்கலம் தொகுதி மக்கள் தாய் உள்ளத்தோடு எனக்கு வாக்களிப்பார்கள் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்

திமுக தேர்தல் அறிக்கையின் இல்லத்தரசிகள் கூப்பணை பற்றி தான் தமிழ்நாடே பேசுகிறது என மு க ஸ்டாலின் கூறியது குறித்து கேள்விக்கு

ஐந்து ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள்.ஸ்டாலின் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மக்களுக்கு உண்மையான திட்டம் என்றால் அப்போதே கொடுத்திருக்கலாம் ஆனால் இது ஏமாற்று திட்டம் தேர்தல் நேரத்திலே தேர்தலில் பின்தங்கி இருக்கும் காரணத்தினால் அதை தூக்கி நிறுத்துவதற்காக பல்வேறு யுக்திகளை திமுக கையாண்டு வருகிறது. அதில் இது ஒரு யுக்த்தியாகஉள்ளது.
மக்களிடத்தில் இது எடுபடவில்லை

தொடர்ந்து பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்தது போல் நாங்கள் செயல்படவில்லை என ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு

யார் தேவைக்காக வெண்கொடை பிடிப்பதும் தேவை என்றால் கருப்பு பலூன் ஊதுவதும் இரட்டை நிலையை யார் கடை பிடித்தார்கள் என்று ஸ்டாலின் சொல்வதை விட தமிழக மக்கள் தெளிவாக சொல்கிறார்கள் அவர்கள் எப்படி கருணாநிதி காலத்திலும் ஸ்டாலின் காலத்திலும் டெல்லிக்கு ஓடோடி சென்று அங்கே காலில் விழுந்து மண்டியிட்டு மத்திய அமைச்சரவையில் பதவி பெற்றார்கள் ஜெயலலிதா காலத்திலும், எடப்பாடியார் காலத்திலும் தமிழ்நாட்டின் மக்களுக்காகத்தான் கோரிக்கை வைத்திருக்கிறோமே தவிர வளர்ச்சித் திட்டங்களுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ்நாட்டிற்காக,தமிழின் வளர்ச்சிக்காகத்தான் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில் மந்திரி பதவிக்காக கோரிக்கை வைத்து இதுவரை மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்கவில்லை 14 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தவர்கள் அவர்கள்தான் என நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.

தேர்தல் அறிக்கையில் 38 வருவாய் மாவட்டம் நேரடியாக சென்று மக்களுடைய கோரிக்கையை பெற்று அதை தேர்தல் அறிக்கையாக பதிவு செய்தோம். பத்திரிக்கையாளர்கள் கோரிக்கையும் கேட்டு பத்திரிக்கையாளர்கள் நலன் காக்கும்வகையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம் பத்திரிக்கையாளர்களும் எடப்பாடி யாருக்கு நன்றி தெரிவித்தார்கள்.